கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முறைகேடாக சம்பாதித்து சொத்துகளை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அளித்துள்ளது.
சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யா
சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யா
Published on

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

சுமார் 600 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான சிவக்குமார் அவரது மகள் ஐஷ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில்  நிலையில், வரும்

12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com