நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம்
தலைமை தேர்தல் ஆணையம்
Published on

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று மதியம்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியும், அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது. எனவே, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23-ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com