அந்தமான் நிகோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று அதிகாலை சுமார் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிகோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி:

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று அதிகாலை 4.08 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெவித்துள்ளனர். இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் வெளியாகாவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com