

அந்தமான்:
வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக 6 மணி 54 நிமிடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #Earthquake #AndamanIslands