ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சுஷ்மா சுவராஜ் ரஷ்யா சென்றார்

ரஷ்யாவில் உள்ள சோச்சி பகுதியில் ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரஷ்யா சென்றுள்ளார்.
ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சுஷ்மா சுவராஜ் ரஷ்யா சென்றார்
Published on

ரஷ்யாவில் உள்ள சோச்சி பகுதியில் ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரஷ்யா சென்றுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள சோச்சி பகுதியில் ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாடு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். இதற்காக சுஷ்மா சுவராஜ் இன்று ரஷ்யா புறப்பட்டு சென்றார்.

ரஷ்யா சென்றடைந்த அவரை, ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வதேவை சந்திக்க உள்ளார். அப்போது,  இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com