உச்ச நீதிமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரி கேவியட் மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யலாம் என்பதால், வெளியுறவுத்துறை மந்திரி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் அருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் வழக்கு தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் மனு தாக்கல் செய்தால், தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com