

கவுகாத்தி:
பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் கடந்த 6-ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெறும் என கூறப்பட்டது. துணை சபாநாயகர் திலிப் குமார் பால் அவையை வழிநடத்தினார்.
126 உறுப்பிகர்களை கொண்ட அசாம் சட்டசபையில் குறைந்தது 21 உறுப்பினர்கள் உள்ளே இருந்தால் தான் அவையை சபாநாயகர் நடத்த முடியும். ஆனால், இன்று அவை தொடங்கியும் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், மணி பல முறை அடிக்கப்பட்டது. இதனையடுத்து, சில உறுப்பினர்கள் உள்ளே வரத்தொடங்கினர்.
இதன் பின்னர், அவை நடவடிக்கைள் தொடங்கிய நிலையில், முதல்வர் உள்பட எந்த மந்திரிகளும் அவையில் இல்லை. இதனால், கடுப்பான துணை சபாநாயகர் அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார். இது தொடர்பாக அவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்முத் குர்மி, “இந்த நாள் ஒரு அவகாரமான நாள். அசாம் சட்டசபை வரலாற்றிலேயே இது போல அவகரமான நிகழ்வு நடந்தது இல்லை” என பேசினார்.
ஒத்திவைப்புக்கு பின்னர் மீண்டும் அவை கூடிய போது, ஒரே ஒரு மந்திரி அவைக்குள் வந்தார். அவர் உள்ளே வந்ததும் சில எம்.எல்.ஏ.க்கள் அவர் காதில் கிசுகிசுக்க அமைதியான தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். #AssamAssembly #TaminNews