டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க பலவந்தப்படுத்தி திருமணம் - சகோதரி பேட்டி

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், தான் ஒரு பெண்னை காதலித்து வருவதாக கூறினார். இது குறித்து அவரது சகோதரி சரஸ்வதி சந்த், டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய சொல்வதாக கூறியுள்ளார்.
டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க பலவந்தப்படுத்தி திருமணம் - சகோதரி பேட்டி
Published on

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் ஆவார். இவர் தனக்கு சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகிய பெண்ணை, காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பெண்ணுடன் இணைந்து எதிர்காலத்தில் வாழப்போவதாகவும் அறிவித்தார்.

மேலும் தனது இந்த முடிவிற்கு பெற்றோர்களே தடை விதிக்காத நிலையில், சகோதரி கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார். இந்நிலையில் டுட்டீயின் சகோதரி சரஸ்வதி சந்த் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:

டுட்டீ இதனை தன் விருப்பப்படி கூறவில்லை. டுட்டீ காதலிப்பதாக கூறிய அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் திருமணம் செய்யுமாறு அவளை பலவந்தப்படுத்தியும், மிரட்டியும் வந்துள்ளனர். இவை அனைத்தும் டுட்டீயின் சொத்திற்காகவும், அவர்களின் சுயலாபத்திற்காகவும் செய்துள்ளனர்.

ஆனால், டுட்டீ இவ்வாறு பேச வேண்டும் என்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவளது திருமணம் குறித்த முடிவுகள் பின்னர் ஆலோசிக்கப்படும். டுட்டீயின் வெற்றிக்கு யார் தங்களை காரணம் என கூறுகிறார்களோ, அவர்கள் குற்றவாளிகள்.

சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கி, அவளை பிரச்சனைகளில் சிக்க வைக்க ஏற்படுத்தப்பட்ட சதி. இந்த விவகாரத்தால் வரும் 2020ம் ஆண்டு  நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது.  அரசின் அனைத்து துறைகளும் அவளது வெற்றிக்காக ஊக்கப்படுத்தி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com