தேசிய சாதனைப் படைத்தார் ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த்

ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனைப் படைத்துள்ளார்.
டூட்டி சந்த்
டூட்டி சந்த்
Published on

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டூட்டி சந்த் 11.22 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இதற்கு முன் டூட்டி சந்த் 11.26 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரது தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதுகுறித்து டூட்டி சந்த் கூறுகையில் ‘‘தோகாவில் படைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக ஓடவில்லை. ஏனெனில் அங்கு வெப்பம் அதிகமாக இருந்தது. எனது உடல் சோர்வடைந்துவிட்டது. நான் கடினமானதாக உணர்ந்தேன்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதியான 11.15 வினாடிகளில் கடக்க முயற்சி செய்தேன். அரையிறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் இடையில் காலஅவகாசம் குறைவாகவே உள்ளதால், போதுமான நேரம் எடுத்துக் கொள்ள நேரமில்லை’’ என்றார்.

தோகாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 11.48 வினாடிகளில்தான் பந்தய தூரத்தை கடந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com