இந்திய அணியை கண்டு நடுங்கும் டுமினி -இந்திய வீரர்கள் குறித்து என்ன சொன்னார்?

இந்திய அணியிண் கேப்டன் விராட் கோலி, முன்னணி வீரர் டோனி ஆகியோர் உலக கோப்பையில் அச்சுறுத்துவார்கள் என தென் ஆப்பரிக்க வீரர் டுமினி கூறியுள்ளார்.
இந்திய அணியை கண்டு நடுங்கும் டுமினி -இந்திய வீரர்கள் குறித்து என்ன சொன்னார்?
Published on

இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து தென் ஆப்பரிக்க முன்னணி வீரர் டுமினி கூறுகையில், 'இந்திய அணியில் அதிகமான போட்டியின் வெற்றியாளர்கள் இருக்கின்றனர்.

வேக பந்து வீச்சு, சுழல் பந்து வீச்சு என இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பும்ராவின் ஃபார்ம் பயங்கரமாக இருந்தது. இதனை உலக கோப்பையிலும் எதிர்ப்பார்க்கலாம்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, அனுபவ வீரர் டோனி ஆகியோர் நிச்சயம் அச்சுறுத்துவார்கள். இவர்களை தாண்டி அந்த நாளில் எப்படி ஆடப்போகிறோம் என்பதில்தான் வெற்றி வாய்ப்பு அமையும்' என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com