துலீப் கிரிக்கெட்- இந்தியா ரெட் அணிக்கெதிராக இந்தியா ப்ளூ 541 ரன்கள் குவிப்பு

துலீப் கிரிக்கெட்டில் இந்தியா ரெட் அணிக்கெதிராக இந்தியா ப்ளூ 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. #DuleepTrophy
துலீப் கிரிக்கெட்- இந்தியா ரெட் அணிக்கெதிராக இந்தியா ப்ளூ 541 ரன்கள் குவிப்பு
Published on

துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா ப்ளூ - இந்தியா ரெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் (கடந்த 4-ந்தேதி) திண்டுக்கல்லில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ப்ளூ பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ப்ளூ அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர்கள் சராசரியாக ரன்கள் அடிக்க 5-வது வீரர் புய் 60 ரன்னும், அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 96 ரன்களும், என் கங்ட்டா 130 ரன்களும், ஸ்வாப்னில் சிங் 69 ரன்களும் அடிக்க இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சில் 167.3 ஓவரில் 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ஹிர்வானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com