துலீப் டிராபி: அறிமுக போட்டியில சதம் அடித்து 17 வயது இளம் வீரர் அசத்தல்

மும்பையைச் சேர்ந்த 17 வயதே ஆன இளம் வீரரான ப்ரித்வி ஷா தனது துலீப் டிராபி அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
துலீப் டிராபி: அறிமுக போட்டியில சதம் அடித்து 17 வயது இளம் வீரர் அசத்தல்
Published on

பகல் - இரவு போட்டியாக நடத்தப்படும் இந்த தொடரில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா ரெட் - இந்தியா ப்ளூ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்தியா ரெட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ப்ரித்வி ஷா, ஹெர்வாத்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெர்வாத்கர் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெடுக்கு ஷா உடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். துலீப் டிராபியில் அறிமுகமான 17 வயதே ஆன ப்ரித்வி ஷா மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தினேஷ் கார்த்திக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com