டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு ஜூலை 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #DSP #Vishnupriya #SuicideCase
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு ஜூலை 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

கோவை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ கடந்த ஏப்ரல் 16 அறிக்கை தாக்கல் செய்தது.

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தந்தை ரவி தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் ஜூலை (19-ந் தேதிக்கு) ஒத்தி வைத்தார். பின்னர் டி.எஸ்.பி.விஷ்னுபிரியா தந்தை ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

பிரேத பரிசோதனை, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், தற்கொலை கடிதம், செல்போன் குறுஞ்செய்தி , சிபிஐ அறிக்கையின் முழு அம்சம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆர்.டி.ஐ.யில் கேட்கப்பட்டுள்ளது. தகவல் பெறப்பட்டவுடன் பதில் மனு செய்யப்படும். நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.#DSP #Vishnupriya #SuicideCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com