தவளக்குப்பத்தில் குடிபோதையில் தவறி விழுந்த பால் வியாபாரி பலி

தவளக்குப்பத்தில் குடிபோதையில் தவறி விழுந்த பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
பலி
பலி
Published on

பாகூர்:

தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் கோபால் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது47), பால் வியாபாரி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நாகராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தவளக்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மதுகுடிக்க சென்றார்.

மதுகுடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது குடிபோதையில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி போனார். அவ்வழியாக சென்றவர்கள் நாகராஜ் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக எண்ணி இதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் வெகுநேரமாக நாகராஜ் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் செங்கேணி நாகராஜை தேடி தவளக்குப்பம் பகுதிக்கு வந்தார். அப்போது தலையில் பலத்த காயத்துடன் தம்பி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நாகராஜ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com