குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட பயணி - காலில் விழ வைத்த விமான பெண் ஊழியர்

ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி விமான நிலையத்தில் விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த பயணியை காலில் விழ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட பயணி - காலில் விழ வைத்த விமான பெண் ஊழியர்
Published on

தெலுங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த 2 பேர் தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.


அவர்களை தடுத்து நிறுத்திய அந்த பெண் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த 2 பேரும் பெண் ஊழியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த ஊழியரின் அறிவுரையின்படி இருவரும் அவரது காலில் விழுந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com