முதல்முறையாக குடிபோதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மேட்டுப்பாளையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் முரளி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பங்களாமேடு சிக்ஸ் கார்னர் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது காரை ஓட்டி வந்த காட்டூரைச்சேர்ந்த ராமசாமி(46) என்பவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சரவணபாபு அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேட்டுப்பாளையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com