ஹாரி-மேகன் தம்பதியிடம் மன்னிப்பு கேட்ட செய்தி ஏஜன்சி

ட்ரோன் மூலம் தெரியாமல் போட்டோ எடுத்த செய்தி ஏஜன்சி ஹாரி-மேகன் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
குழந்தை ஆர்சி உடன் ஹாரி-மேகன் தம்பதி (கோப்புப்படம்)
குழந்தை ஆர்சி உடன் ஹாரி-மேகன் தம்பதி (கோப்புப்படம்)
Published on

இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கெல் தம்பதி பிரிட்டன் அரசு குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தை ஆர்சி.

கடந்த ஜூலை மாதம் ஆர்சி 14 மாதங்கள் இருக்கும்போது குழந்தையை ஹாரி மேகன் தம்பதியின் அனுமதி இல்லாமல் ட்ரோன் மற்றும் ஹெலிகேம் கொண்டு புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த தம்பதி அமெரிக்க காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது.

செய்திகள் சேகரிப்பதற்காக பாப்பராசிகள் எந்த எல்லைவரை வேண்டுமானாலும் செல்வார்கள் என அப்போது பத்திரிகைதுறை விமர்சிக்கப்பட்டது. தற்போது கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு செய்தி ஏஜன்ஸியின் புகைப்பட ஊழியர் ஒருவர் பத்திரிகையில் பதிவிடுவதற்காக இளவரசர் ஆர்சியை இவ்வாறு மறைமுகமாக புகைப்படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஹாரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சலஸ் கவுன்ட்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆர்சி தனது பாட்டியுடன் வீட்டு தோட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிகைக்கு ஏற்கப்படாது என இதனை எடுத்த எக்ஸ்-70 ஏஜென்சி உறுதி அளித்தது. மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஹாரி-மேகன் தம்பதியிடம் அளிக்கப்படும் என உறுதி அளித்தது.

மேலும் ஹாரியின் வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு பகுதியை எக்ஸ்-17 நிறுவனம் அளிப்பதாக உறுதி அளித்து மன்னிப்பு கோரியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இளவரசர் சார்லசின் மனைவி டயானா பிரிட்டன் பாபரசிகள் தொல்லை காரணமாக காரில் வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்த சம்பவம் 1990-களில் உலகையே உலுக்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com