டெல்லி: டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் - சுவரில் மோதியதால் பரபரப்பு

பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்காக இன்று நடைபெற்ற டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தின்போது ரெயில் என்ஜின் சுவரில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் - சுவரில் மோதியதால் பரபரப்பு
Published on

டெல்லியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கான பணிகள் முடிந்து தாவரவியல் பூங்கா முதல் கல்கா ஜி வரையிலான புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது. வரும் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தின் முதல் சேவையை தொடங்கி வைக்கிறார்.

டிரைவர் இல்லாமல் இந்த வழித்தடத்தில் பிற்காலத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ள அதிகாரிகள் இன்று அதற்கான சோதனை ஓட்டத்தை நடத்திப் பார்த்தனர்.

அப்போது, டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட சோதனை ஓட்ட ரெயில் என்ஜின் கலின்டி கஞ்ச் நிலையத்தின் அருகே சுவற்றில் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யார்க்கும் காயம் ஏற்படவில்லை என டெல்லி மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com