தேனி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை

தேனி அருகே மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை
Published on

தேனி:

தேனி அருகே சின்னமனூர் அப்பிபட்டி காந்திஜி நடுநிலைப்பள்ளி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(43). இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்றும் ராஜேந்திரன் மிதமிஞ்சிய போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆர்த்தி சத்தம்போட்டார். இதில் மனமுடைந்த ராஜேந்திரன் தன்னுடைய மதுபழக்கத்தால் வீட்டில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது என வேதனையடைந்து தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர், தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com