பொம்மிடி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

பொம்மிடி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏர் உழுது விட்டு திரும்பிய போது இந்த சம்பம் நடந்துள்ளது.
பலி
பலி
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்துள்ள கொங்கரப்படடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசந்திரன் (வயது35). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி போதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த  மாது என்பவர் விவசாய நிலத்தில் நேற்று ஹரிசந்திரன் டிராக்டர் மூலம் ஏர் உழுது கொண்டிருந்தார். 

பின்னர் ஏர் உழுது விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது டிராக்டர் எதிர் பாராதவிதமாக பள்ளத்தில் சிக்கி திடீரென கவிழ்ந்தது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ஹரிசந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com