குளத்துக்குள் பாய்ந்த லாரி- டிரைவர் தப்பினார்

புளியம்பட்டி அருகே குளத்துக்குள் லாரி பாய்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
Published on

புஞ்சைபுளியம்பட்டி:

கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு ஒரு லாரி தளவாடப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. லாரியை பு.புளியம்பட்டி அடுத்த மாராயிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 60) என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த லாரி புளியம்பட்டி அருகே உள்ள புங்கம் பள்ளிகுளம் அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி குளத்தில் பாய்ந்தது. இதில் லாரி சேதம் அடைந்தது. அதில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி குளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் பழனிசாமி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் இடிபாட்டில் சிக்கிய அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com