வேளச்சேரியில் பரபரப்பு - வங்கி ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப வந்தபோது ரூ. 52 லட்சத்துடன் டிரைவர் ஓட்டம்

வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சத்துடன் டிரைவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்துடன் டிரைவர் தப்பி ஓட்டம்
பணத்துடன் டிரைவர் தப்பி ஓட்டம்
Published on

சென்னை:

சென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு அதிகாரிகள் 3 பேர் ஒரு வேனில் பணம் நிரப்ப வந்தனர். அவர்கள் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் டிரைவர் தப்பி ஓடினார். 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவர் அம்புரோஸ் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com