திண்டுக்கல் அருகே டிரைவரை தாக்கி ரூ.6,000 பறிப்பு

திண்டுக்கல் அருகே டிரைவரை தாக்கி ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

ஆத்தூர்:

கரூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 40). லாரி டிரைவராக உள்ளார். இவர் நெல்லையில் இருந்து கோவைக்கு பொருட்கள் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருந்தார். இன்று அதிகாலை திண்டுக்கல்லை அடுத்துள்ள சித்தையன் கோட்டை கூலம்பட்டி பிரிவில் லாரியை நிறுத்தி விட்டு சிறு நீர் கழிக்க சென்றார்.

மீண்டும் வந்த போது லாரியின் அருகே 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். திடீரென சந்திரசேகரை தாக்கி அவரிடம் உள்ள பணத்தை கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இருந்தபோதும் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்து சந்திரசேகரை தாக்கி விட்டு சென்று விட்டனர்.

படுகாயமடைந்த அவர் இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com