ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி மனைவியுடன், டிரைவர் தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் தலைமறைவாக இருந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது21), பொக்லைன் டிரைவர். இவரும் 17 வயது பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோவிந்தசாமியும், இளம்பெண்ணும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். 

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில், தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவிந்தசாமியும், இளம்பெண்ணும் நேற்று பொன்னேரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் தேடுவதை அறிந்து ஏலகிரிமலை போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதும், இளம்பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com