ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி தடுப்பணை வறண்டது - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கோடை வெயில் காரணமாக ஊத்துக்கோட்டையில் உள்ள சுருட்டப்பள்ளி அணை முழுவதுமாக வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி தடுப்பணை வறண்டது - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டபள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை உள்ளது. இதில் 10 அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 5 அடி தண்ணீர் எப்போதும் இருப்பு இருக்கும். இதனால் ஆரணி ஆற்றங்கரையில் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இதைப்போல் சுருட்டபள்ளி, காரணி, நந்திமங்கலம், காசிரெட்டிபேட்டை, அனுமந்தாபுரம், அச்சமா நாயுடு கண்டிகை, சுப்பா நாயுடு கண்டிகை உட்பட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கிராமங்களில் உள்ள நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகித்து வருகின்றன.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்ததால் இந்த தடுப்பு அணை நிரம்பி வழிந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் தடுப்பு அணையில் தண்ணீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது. கோடை வெயில் காரணமாக தற்போது தடுப்பு அணை முழுவதுமாக வறண்டது.

நெல் பயிறு அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு அணை வறண்டது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. அதே போல் ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com