வேதாரண்யம் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் சாருமடை கடைவீதியின் பிரதான சாலையில் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாகிறது.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீர் வரும் பிரதான குழாயில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிகளவில் வெளியேறி வீணாகிறது. இந்த குழாய் உடைப்பு பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com