மத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் தகராறு- 2 வாலிபர்களுக்கு கத்திகுத்து

மத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களுக்கு கத்திகுத்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்திகுத்து
கத்திகுத்து
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்லியம்மாள் (45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள பொதுகுடிநீர் குழாயில் சங்கர் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்லியம்மாளும், சங்கருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த செல்லியம்மாள் தனது உறவினர்களான பகவதி (18), பழனி (33), மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கர், முருகேசன் (38) ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தியும், உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த சங்கர், முருகேசன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்தூர் போலீஸ் இன்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து வாலிபர்களை தாக்கியதாக செல்லியம்மாள், பகவதி, பழனி, மகேந்திரன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து பகவதி, மகேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com