குடிநீர் தட்டுபாட்டை தீர்க்ககோரி துறையூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

துறையூரில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுபாட்டை தீர்க்ககோரி துறையூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

துறையூர்:

துறையூர் ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு பச்சைமலை பகுதியில் 100 நாள் வேலை மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பச்சைமலைப் பகுதிக்கு உட்பட்ட செம்புலிசாம்பட்டி, தாளூர், தோணூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் பஞ்சம் நிலவி வருவதாகவும், இப் பகுதி மக்கள் இது குறித்து பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனவும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மேலும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்கிட லாரிகளில் குடிநீர் வழங்கவும், வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், வேலை செய்த 15 நாட்களுக்குள் கூலி வழங்ககோரியும் ,100 நாள் வேலை கூலி பணத்தை வங்கி கடனுக்கு பிடித்தம் செய்வதை நிறுத்த கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பச்சைமலை பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com