தஞ்சையில் குடிநீர் சப்ளை பாதிப்பு: காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தஞ்சையில் குடிநீர் கேட்டு திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சையில் குடிநீர் சப்ளை பாதிப்பு: காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே செங்கமலம் நாச்சியார் கோவில் தெரு உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 மாதங்களாக குடி தண்ணீர் வரவில்லை. இதனால் தெருக்களில் எந்த வீட்டில் போர் இருக்கிறதோ அந்த வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை தஞ்சை ராஜப்பாநகர் சாலையில் காலிகுடங்களுடன், ரோட்டில் மரக்கட்டைகளை வைத்து ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியிலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் நாளைக்குள் தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அறித்தனர். இதைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். 

குடிநீர் கேட்டு திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com