தண்டராம்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தண்டராம்பட்டு அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அடுத்த மேல் கரிப்பூரில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போர்வெல் பாதிப்பால் அப்பகுதியில் கடந்த 2 மாதமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை மேல் கரிப்பூர் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விரைவில் போர்வெல்லை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து 3 மணி நேர சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com