தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

தா. பேட்டையில் குடிநீர் கேட்டு முசிறி - பவித்திரம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Published on

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம்  தா.பேட்டை அடுத்த கோணப்பம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை  கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், முசிறி -  பவித்திரம் செல்லும் சாலையில் கோணப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த தா.பேட்டை போலீசார் மற்றும் ஒன்றிய திட்ட ஆணையர் கண்ணன் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் கிடைக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com