தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தா.பேட்டை அருகே அயித்தாம் பட்டியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த எம்.புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த அயித்தாம் பட்டியில் கடந்த பல மாதங்களாக போதிய அளவு குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை வலியுறுத்தியும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது. 

இதையடுத்து நேற்று மாலை முசிறி-துறையூர் செல்லும் மெயின்ரோட்டில் அயித்தாம் பட்டியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, 

அயித்தாம்பட்டி பகுதியில் மின் மோட்டார்கள் உதவியுடன் ஆழ்துளைகிணறு போர்வெல் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது பழுது ஏற்பட்டதாக கூறி மின்மோட்டார்கள் அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை வரை மின் மோட்டார்கள் சரிசெய்ய வில்லை. வழக்கமாக கிடைக்கும் காவிரி குடிநீரும் போதிய அளவு கிடைக்க வில்லை. இதனால் அயித்தாம் பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கூறினர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி சீத்தாராமன், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் சந்திரசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்வி நாயகம், முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது  பொது மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com