வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

வேதாரண்யம் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விஷம்
விஷம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகே உள்ள தென்நடார் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி அம்மாகண்ணு (வயது 60). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அம்மாகண்ணு வீட்டில் யாரும் இல்லாதபோது வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com