ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்
Published on

ஆரணி:

ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி. நகர் புதுத்தெருவில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பைப்லைன் மூலம் மினி டேங்க்கிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுப்பற்றி அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.

அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் வழங்கப்படாததால் கடந்த 15 நாட்களாக இ.பி.நகர் புதுத் தெரு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மக்கள் குடிநீர் வழங்கக்கோரி ஆரணியில் இருந்து ராட்டினமங்கலம் செல்லும் புறவழிச் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com