திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்

குடிபோதையில் கணவன் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் இருந்த கணவன், மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் கட்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர், ராஜா (வயது 45) . இவரது மனைவி ரேவதி. (38). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு போத்தியப்பன் (10), கார்த்திக் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் - மனைவிக்கிடையே குடும்ப தகராறு காரணமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதாக தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த ராஜா தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜா வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதனால், மனைவி ரேவதிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா அங்கு கிடந்த கட்டையை எடுத்து மனைவியை தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். இது குறித்து ரேவதியின் தந்தை சின்னத்தம்பி, திருச்சிற்றம் பலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சிற்றம் பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் கர்ணன், மற்றும் சக்திவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும், இறந்த ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com