நாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி

நாமக்கல்லில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல்லில் பா.ஜனதா சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டபோது எடுத்த படம்.
நாமக்கல்லில் பா.ஜனதா சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டபோது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மணிக்கூண்டு அருகே பா.ஜனதா எஸ்.சி. அணி சார்பில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், நகர பொதுச்செயலாளர் சிம்பு, ஒன்றிய தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வணங்காமுடி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரான்சீஸ், தொகுதி செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் தம்பிராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரான்சீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஜெயரத்தின காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிரகா‌‌ஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரசார செயலாளர் மஞ்சுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சேலம் மண்டல பொருளாளர் சிவக்குமார், நாமக்கல் கிளை தலைவர் மணி, கிளை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com