ஜெ. கைரேகை வழக்கில் ஆஜரான டாக்டர் பாலாஜியின் பதிலை வெளியிட ஐகோர்ட்டு தடை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை ஆவணத்தில் இடப்பட்ட வழக்கில் மருத்துவர் பாலாஜி இன்று ஆஜரான நிலையில், அவர் அளித்த பதில்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.
ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட ஆவணம்
ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட ஆவணம்
Published on

சென்னை:

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 13-ம் தேதி மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்போர்டு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது, அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்ததால் அதன் பெயரிலேயே விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதனையடுத்து, ஜெயலலிதா கைரேகை வைத்ததாக சான்றளித்த மருத்துவர் பாலாஜி இன்று ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, பாலாஜி இன்று நேரில் ஆஜரானார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை வெளியிட நீதிபதி தடை விதித்ததுடன், நவம்பர் 3-ம் தேதி மீண்டும் அவரை ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக தேர்தல் ஆணையர் ஆஜரான சமயத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்தாலும் பாலாஜியின் பதில்களை வெளியிட நீதிபதி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com