மனைவியிடம் வரதட்சணை கொடுமை - ஓட்டல் மேலாளர் மீது வழக்கு

திருச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய ஓட்டல் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மெயின் ரோடு இறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 32). இவர் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரம்யாவின் பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.

இருவரும் திருமணத்திற்கு பிறகு திருச்சி புத்தூர் பூந்தோட்டம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியன் வீடுகட்டவும் ,வரதட்சணையாகவும் ரம்யாவிடம் ரூ. 3 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரம்யா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பாண்டியன், அவரது அம்மா பஞ்சவர்ணம் மற்றும் உறவினர் வள்ளியம்மாள், கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com