

லக்னோ:
அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும் வரதட்சணை கொடுமை , பெண் சிசு அழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் இன்னும் இருந்து வருகின்றன. அதற்கு உதாரணமாக உத்தரபிரேதம் மாநிலத்தில் ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரேதசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள பிரண்ட்ஸ் காலணியைச் சேர்ந்தவர் சப்னா. இவருக்கும் சுபாஸ் யாதவ் என்பவருக்கும் ஒன்றரை வருடத்திற்கு முன்னாள் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன சில நாட்களிலேயே சுபாஸ் வீட்டில் உள்ளவர்கள் 2 லட்சம் மற்றும் நகையை வரதட்சணையாகக் கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
சப்னா வரதட்சணை தர தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், நேற்று காலை உச்சகட்ட கொடூரமாக சப்னாவின் மாமனார், மாமியார் ,கணவர் மற்றும் கணவரின் சகோதரி ஆகியோர் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் சப்னாவை எரித்துள்ளனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது சப்னா தீயில் கருகி கிடந்தார்.
பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சப்னா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சப்னா உயிருடன் இருந்த போது அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவரின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.