தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை- கணவர் கைது

தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

தேனி:

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மவுருன்னிசா(24). இவருக்கும் அன்னஞ்சி பகுதியை சேர்ந்த மல்கர்பாட்சா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 25 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1லட்சம் உள்பட சீதனங்கள் கொடுக்கப்பட்டது. கடந்த சிலநாட்களாக மல்கர்பாட்சா நடவடிக்கை மாறுபட்டதால் மவுருன்னிசா இதுகுறித்து கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மல்கர்பாட்சா மற்றும் அவரது உறவினர்கள் மவுருன்னிசாவை கூடுதல் வரதட்சணையாக கார் மற்றும் சொத்தில் பங்கு வாங்கிவரும்படி கேட்டு துன்புறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து மல்கர்பாட்சாவை கைது செய்தனர்.

இதேபோல் உத்தமபாளையம் க.புதுப்பட்டியை சேர்ந்தவர் பவளக்கொடி(45). இவருடைய மகள் ரங்கீளாவுக்கும், அதேபகுதியை சேர்ந்த சித்ரா என்பவரின் மகனுக்கும் திருமணம் நடந்துள்ளது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ரங்கீளா இறந்துவிட்டார். இதனால் சீர்வரிசைகளை பெறுவதில் இருகுடும்பத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பவளக்கொடியை சித்ரா தாக்கியுள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com