ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வழக்கு
வழக்கு
Published on

தேனி:

தேனி மாவட்டம் கண்டமனூர் தேக்கம்பட்டி அருகே உள்ள எட்டப்பராஜபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் தேவி இசக்கியம்மாள்(வயது25). இவருக்கும் கோவிந்தாநகரை சேர்ந்த சீனிவாசன் மகன் பரந்தாமன்(29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது வரதட்சணையாக பெண்வீட்டார் தரப்பில் 10 பவுன் நகை, ரூ.1லட்சம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பரந்தாமன் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லையாம்.

இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுபற்றி பெண்வீட்டார் தரப்பில் கேட்டபோது சேர்ந்து வாழவேண்டும் என்றால் கூடுதலாக 25 பவுன் நகை வேண்டும் என கேட்டனராம்.

இதுபற்றி தேவிஇசக்கியம்மாள் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பரந்தாமன், அவரது பெற்றோர் சீனிவாசன், ரங்கநாயகி ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com