திரிபுரா முதல்வரின் சுதந்திர தின உரைய ஒளிபரப்ப தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுப்பு

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப மத்திய அரசின் கட்டுப்பாடில் உள்ள தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
திரிபுரா முதல்வரின் சுதந்திர தின உரைய ஒளிபரப்ப தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுப்பு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் 71-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார். அதேபோல், முதலமைச்சர்களும் தங்களது மாநிலங்களில் கொடியேற்றி உரையாற்றினர்.

இந்நிலையில், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப மத்திய அரசின் கட்டுப்பாடில் உள்ள  தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

சர்க்காரின் 6 நிமிட உரை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. முதல்வர் சர்க்காரின் உரையில் சில திருத்தங்களை செய்து மீண்டும் அனுப்புமாறு மாநில அரசிடம் தூர்தர்சன் கேட்டுக் கொண்டது. ஆனால், திரிபுரா அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. இதனையடுத்து திரிபுரா முதல்வரின் உரை ஒளிபரப்பப்படவில்லை. 

முதல்வர் சர்க்காரின் உரை பின்னர் ஊடகங்களில் எழுத்துபூர்வமாக வெளியானது. அதில், “இந்திய நாட்டின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை தான், ஆனால் தற்போது பசுகாப்பு என்ற பெயரில் பிரிவினை வாதத்தை தூண்டி வருகிறார்கள்” என்பது போன்ற கருத்துக்களை பேசி இருந்தார்.

இதனையடுத்து, மத்திய அரசின் தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ ஊடகங்களின் செயல்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com