யுவராஜ், ரெய்னாவிற்கான கதவு மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி

யுவராஜ் சிங் மற்றும் ரெய்னாவிற்கான கதவு இன்னும் மூடப்படவில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
யுவராஜ், ரெய்னாவிற்கான கதவு மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி
Published on

பிசிசிஐ-யால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடற்பயிற்சி சோதனையால் யுவராஜ் சிங் மற்றும் ரெய்னாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இருவரும் இடம்கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதற்கு காரணம் உடற்தகுதி போட்டியில் தோல்வியடைந்ததுதான் என்று சொல்லப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இனிமேல் இந்திய அணியில் இடம்கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இருவருக்குமான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தற்போதைய பார்ஃம், உடற்பயிற்சி தகுதி, பீல்டிங் அகியவற்றிற்கான அளவீட்டில் சிறப்பாக செயல்பட்டால் ஒவ்வொரு வீரர்களும் இந்திய அணிக்கான தேர்விற்கு தகுதியானவர்கள். அந்த வகையில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கான கதவு மூடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com