அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்- டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump #PoisonGasAttack
அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்- டிரம்ப் அறிவிப்பு
Published on

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது.

உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன.

இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது.

இந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகம் எழுப்பப்பட்டது.

ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது.  எனினும் பலி எண்ணிக்கை 180ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார்.

இந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com