அரசு டாக்டர்கள் மீதான பணி முறிவு உத்தரவு ரத்து- அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் கோரிக்கையை ஏற்று இன்று காலை பணிக்கு திரும்பிய அரசு டாக்டர்கள் மீதான பணி முறிவு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கோரிக்கையை ஏற்று இன்று காலை பணிக்கு திரும்பிய அரசு டாக்டர்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com