கபில்தேவ்வுடன் பாண்ட்யாவை ஒப்பிடக்கூடாது- ரோஜர் பின்னி

பேட்டிங் சரியில்லாததால் கபில்தேவ்வுடன் பாண்ட்யாவை ஒப்பிடக்கூடாது என்று முன்னாள் வீரர் ரோஜர் பின்னி கூறியுள்ளார். #Pandya #KapilDev #RogerBinny
கபில்தேவ்வுடன் பாண்ட்யாவை ஒப்பிடக்கூடாது- ரோஜர் பின்னி
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடிய கூடியவர். பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் சிறந்த ஆல்- ரவுண்டராக விளங்குவதாக பாராட்டு பெற்றவர்.

அவரை கபில்தேவ்வுடன் ஒப்பிட்டு பேசினர். ஆனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஹர்த்திக் பாண்ட்யாவை முன்னாள் வீரர் ரோஜர் பின்னி சாடியுள்ளார்.

ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங்கில் அணிக்கு பங்களிப்பு அளிப்பதில்லை. ஓரளவுக்கு பந்து வீசுகிறார். இதனால் அணியில் இடம் பிடித்து வருகிறார். அவர் அதிர்ஷ்டவசமாக ஆல்-ரவுண்டராக பார்க்கப்படுகிறார்.

அவரை கபில்தேவ்வுடன் ஒப்பிடக்கூடாது. கபில்தேவ் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பு முதல்தர போட்டியில் நிறைய சதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஹர்த்திக் பாண்ட்யா முதல்தர போட்டிகளில் அவ்வளவாக ரன்கள் எடுக்காமலேயே சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். அவர் டெஸ்ட் அணியில் விளையாட வேண்டுமென்றால் பரோடா அணிக்காக முன்வரிசையில் களம் இறங்கி விளையாட வேண்டும். அவர் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.  #Pandya #KapilDev #RogerBinny

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com