

தர்மபுரி:
தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-
தர்மபுரி எம்.பி. தொகுதிக்கு தற்போது 3 எம்.பி.க்கள் கிடைத்து உள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தர்மபுரி எம்.பி. தொகுதிக்குள் அடங்கிய மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரசேகர் அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
நாங்கள் 3 பேரும் சேர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்போம். வேலைவாய்ப்பின்மையை தடுக்க கொண்டுவர வேண்டிய திட்டங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க பொதுமக்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும். என்னுடைய பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களிலும், எனது இமெயில் முகவரியிலும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து சமூக வலைத்தள நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.