தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
தி.மு.க.
தி.மு.க.
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அதன்படி, தஞ்சையில் இன்று காலை தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

அனைவரும் சமூக இடைவெளியுடன் நின்று டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதேபோல் பட்டுக்கோட்டை தி.மு.க.வின் கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் கதிரவன், ஒன்றிய பொருளாளர் பாலு, தொண்டரணி அமைப்பாளர் குமார் மற்றும் தி.மு.க.வினர் கூடி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கருப்பு சட்டை அணிந்து,  டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com