தாக்குதலுக்கு உள்ளான ஜே.என். பல்கலைக்கழக மாணவர்களுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

ஜே.என். பல்கலைக்கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.
கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி
Published on

புதுடெல்லி:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குததல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள்  நடந்து வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க. எம்.பி கனிமொழி டெல்லி ஜே.என்.பல்கலைக்கழகத்துக்கு இன்று சென்றார். அங்கு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்துப் பேசினார். கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்தார்.

அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் இதுவரை தாக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவில்லை. இதுதொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கனிமொழியிடம் மாணவர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் பேசிய எம்.பி கனிமொழி, இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பேச உள்ளேன். எந்த நேரத்திலும், எவ்வித உதவிக்காகவும் தம்மைத் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும், அவர் காஷ்மீர் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் மோசமாக தாக்கப்பட்டிருப்பதை நேரில் சென்று பார்த்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com