திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணா நிதி உடல் நல கோளாறு காரணமாக கடந்த 7 மாதங்களாக ஓய்வில் உள்ளார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொறுத்தப்பட்டு அதன் மூலமாகவே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருணாநிதியின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே 2 முறை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் கருணா நிதி இன்று காலை ராயப் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். சாதாரண உடல் பரிசோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் கருணாநிதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது கருணாநிதியின் தொண்டையில் பொறுத்தப்பட்டிருந்த உணவு குழாயை அகற்றுவதற்கு டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி கருணாநிதிக்கு ஏற்கனவே பொறுத்தப்பட்டிருந்த உணவு குழாய் அகற்றப்பட்டது. அதற்கு பதில் புதிய குழாய் பொறுத் தப்பட்டது. 

இந்நிலையில், செயற்கை உணவுக் குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com